கடத்தூர் மணியம்பாடியில் திமுக தலைவர், அதிமுக துணை தலைவர் மாறி மாறி குற்றசாட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 டிசம்பர், 2024

கடத்தூர் மணியம்பாடியில் திமுக தலைவர், அதிமுக துணை தலைவர் மாறி மாறி குற்றசாட்டு.


தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மணியம்பாடி ஊராட்சியில் தலைவராக மஞ்சுளாவும், துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த ராசாத்தியும் இருந்து வருகின்றார். பதவி ஏற்ற காலமாக ஊராட்சியில் அடிப்படை தேவைகளான மின் கட்டணம், குடிநீர், சாக்கடை காழ்வாய் தூர்வாருதல், உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பணம் வழங்குவது, தேவையான பணிகள் செய்வதிலும், ‌கையெழுத்து, ஒடிபி ஆகியவற்றில் இருவருக்கும் முரண்பாடு இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. 


இந்த நிலையில் பதவி காலம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஊராட்சியில் பல லட்சம் இருப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இதை எடுக்க துணை தலைவரிடம் ஒப்புதல் கேட்டதாகவும், மறுத்ததால், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் சிறப்பு ஊராட்சி கூட்டத்தில், ஏழு வார்டு உறுப்பினர்களின் ஆதரவோடு துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ராசாத்தியை நீக்கி தீர்மானம் போட்டு அதிகாரிகளிடம் கொடுத்து தகுதி நீக்கம் செய்து விட்டதை அறிந்த ராசாத்தி நேற்று முன்தினம் தர்மபுரி காலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த நிலையில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி மஞ்சுளா கூறும்போது:- மணியம்பாடி பஞ்சாயத்தில் மக்களுக்கான நலதிட்ட பணிகள் செய்வதில் ஒத்துழைப்பு கொடுக்காமல் கமிசன் கேட்டு இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஒடசல்பட்டியில் அதிமுக துணை தலைவி ராசாத்தி மீது பல்வேறு புகார்கள் தெரிவித்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை அப்படி ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும், வார்டு உறுப்பினர்களுடன் தெரிவித்தார், திமுக தலைவி, அதிமுக துணை தலைவி ஆகியோரின் ஒருவர் மீது ஒருவர் தொடர்புகார் கூறிவருவது தொடர்ந்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad